மிட்டாய் கவிதைகள்!

அழகை ரசிக்கிறேன்!

December 28, 2013

girl and boy

உந்தன் கண்கள் காட்டும் திசைகளிலே
எந்தன் கண்ணும் சென்று திரும்புதே..

உந்தன் கால்கள் நடக்கும் வேகத்திலே
எந்தன் வேகம் மாறிப் போகுதே..

உந்தன் குரலின் ஓசை கேட்கையிலே
எந்தன் பற்கள் மெல்லச் சிரிக்குதே..

என்னைக்  கடந்து செல்லும் போகையிலே
நொடிகள் இதயம் நின்று துடிக்குதே..

உந்தன் ரசிக்கும் அழகினைப் பார்க்கையிலே
நானும் ரசிகன் என்றே தோன்றுதே..

உந்தன் புன்னகை தந்திடும் வெளிச்சத்திலே
வளரும் பிறை நிலவும் தோற்குதே..

உந்தன் வாகைசூடும் பூக்களின் வாசத்திலே
எந்தன் மூச்சுக் காற்றும் வாழ்ந்திடுதே..

உன்னைக் காணாத அந்த நேரத்திலே
எந்தன் உலகம் இருளில் வாடுதே..

பெண்ணே,
அழகாய் இருப்பது உன் தவறா?
இல்லை,
அழகை ரசிப்பது என் தவறா?


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்